நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை ஓடக்காடு பகுதியில் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய பயிர் சாகுபடி திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம். மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய செலவும் மிகவும் குறைவு. எனவே, அனைவரும் இயற்கை விவசாயமே செய்து பயனடைய வேண்டும். தமிழகத்தில் முதன்முதலாக நீலகிரி மாவட்டத்தில் தான் பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டது. அதன்பிறகு முதலமைச்சரால் ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று இந்த ஓடக்காடு கிராமம் தேர்வு செய்யப்பட காரணம் இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் உள்ளனர். எனவே தான் முதன்முதலாக இங்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பிளாஸ்டிக்கை எப்படி படிப்படியாக பயன்படுத்தாமல் விடுவித்தோமோ, அதேபோல மருந்துகள் மூலம் பண்ணக்கூடிய விவசாயத்தை விடுத்து மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயம் நிறைந்த மாவட்டமாக மாற்றுவோம், இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் ஓடக்காடு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு மினிடிராக்டரை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாவணையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நபார்டு நிதி உதவியுடன் விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 5.21 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதன்மை பதப்படுத்தும் மையம் மற்றும் அணிகொரையில் ரூ. 4.77 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதன்மை பதப்படுத்தும் மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) சிவசுப்ரமணிய சாம்ராஜ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் விவேகானந்த் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.