மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால், 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. அணைக்கு 12,000 கனஅடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்தும் நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.