நிரம்பியது பில்லூர் அணை!

அணைக்கான நீர்வரத்து கூடுதலாக இருந்த காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து அனை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.

தற்போது அணையின் நீர்வரத்து வினாடிக்கு பத்தாயிரம் கனஅடியாக இருப்பதால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது அதன் நீர் மட்ட உயரம் 97 அடியாக  உயர்ந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்மின் உற்பத்தி பணிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த போதிலும் அணைக்கான நீர்வரத்து அதனை விட கூடுதலாக இருந்த காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அணையின் நான்கு மதகுகளில் இரு மதகுகள் மட்டும் திறக்கப்பட்டு, அதன் மூலம் வினாடிக்கு ஏழாயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி நீந்துவது, குளிப்பது, மீன் பிடிப்பது, பரிசல்கள் மூலம் ஆற்றில் பயணிப்பது போன்ற நடவடிக்கைளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் தாழ்வான பகுதிககளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் உள்ளூர் நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இன்று இரவும் மழை நீடித்து ஆணை முழுமையாக நிரம்பும் பட்சத்தில் அணைக்கான நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்படும் என்பதால் ஆற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையை சென்றடைவதால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...