'நாகரிகமில்லாமல் நடக்கும் சில நடத்துனர்களுக்கு பதில் நடத்துனர் இல்லாப் பேருந்துகளே மேல்': பயணிகள் கருத்து

கோவை: தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் (P2P) சர்வீசுக்கு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடத்துநர் இல்லாப் பேருந்துகள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை: தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் (P2P) சர்வீசுக்கு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடத்துநர் இல்லாப் பேருந்துகள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை - சேலம், கோவை - ஈரோடு, விழுப்புரம் - சென்னை, சேலம் - பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு தற்போது நடத்துனர் இல்லாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகள் தரப்பில் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகரிகம் இல்லாமல் நடந்துகொள்ளும் சில நடத்துனர்களுக்கு மத்தியில் இந்த நடத்துநர் இல்லா பேருந்துகள் வரவேற்கத்தக்கது என்பது தான் பிரதான காரணமாக உள்ளது.

நடத்துனர்கள் சிலர் மட்டுமே பயணிகளிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்துகொள்கிறார்கள், பலர் எப்போதும் மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பது தான் இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. இதனிடையே, பாயிண்ட் டூ பாயிண்ட் சர்வீஸ் என்ற போதிலும் நடத்துனர்கள் சிலர் பேருந்தில் கூட்டம் ஏற்ற பல நிறுத்தங்களில் மக்களை ஏற்றிச் செல்லத்தான் முயற்சி செய்வார்கள். இதனால், நேரம் அதிமாகும், பேருந்தில் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. தற்போது, இந்தப் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ராஜ்குமார் என்பவர் கூறுகையில், "இந்த வகை பேருந்துகளால் முதலில் நம் இருக்கைகளை நம்மால் உறுதி செய்ய முடிகிறது. கூட்ட நெரிசல் இல்லை. ஓர் இனிய பயண அனுபவம் ஏற்படுகின்றது. இதற்கு முன் பாயிண்ட் டூ பாயிண்ட் சர்வீஸில் பயணிக்கும் போது பேருந்து இருக்கைகள் நிரம்பவில்லை என்றால், போகும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை நடத்துனர்கள் ஏற்றிச் செல்ல முயல்வார்கள். இதுபோன்ற பிரச்சினை தற்போது இல்லை என்பதால் ஒரு மணிநேரம் பயணநேரம் மிச்சமாகிறது," என்றார்.

நடத்துனர் இல்லாப் பேருந்துகளால் பயணிகளின் பாதுகாப்பு என்பது முழுவதும் பாதுகாக்கப்படுமா..?, பயணத்தின் போது உடல் நலக்குறைவு, உடல் உபாதைகள், இயற்கை உபாதைகள் போன்றவைகள் ஏற்பட்டால் எவ்வாறு அதனை எதிர்கொள்வது என்ற அச்சமும் பயணிகளிடையே எழுந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வகை பேருந்துகள் முழுவதும் பாதுகாப்பானது. இதில், அவரச கால உதவிக்கு முன் மற்றும் பின் பக்கத்தில் பட்டன் ஒன்று உள்ளது. இதனை அழுத்தினால் போதும் ஒட்டுநருக்கு அது அலாரம் அடிக்கும் பேருந்தை நிறுத்திவிடுவார். மேலும், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஒட்டுநர் பேருந்தை இயக்கி செல்வார். பேருந்தில் உள்ள கதவுகள் ஆட்டோமெட்டிக் முறையில் அடைக்கப்படும். இதனால், பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது," என்றார்.

இதனிடையே, நடத்துனர் இல்லாப் பேருந்துகளால் எதிர்காலத்தில் நடத்துனர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும் என தொழிற்சங்கங்கள் புகார் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தத் திட்டம் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்ற பேருந்துகள் அதிகளவில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...