தமிழில் நீட் எழுதியவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்க சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்க சி.பி.எஸ்.இ.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்தது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வு சரியான முறையில் நடந்துள்ளதாகப் பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு சிக்கல் எழுந்துள்ளது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...