பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறிய சொட்டு நீர் பாசனத்தை, மொழி பெயர்த்துக் கூறும் போது சிறுநீர் பாசனம் என எச். ராஜா கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறிய சொட்டு நீர் பாசனத்தை, மொழி பெயர்த்துக் கூறும் போது சிறுநீர் பாசனம் என எச். ராஜா கூறியது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று சென்னை வந்த அமித்ஷா தலைமையில் ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி மற்றும் திட்டங்களை இந்தியில் எடுத்துக் கூறினார். இதனை பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மொழி பெயர்த்துக் கூறி வந்தார். அப்போது, சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ. 332 கோடி நிதி அளித்திருப்பதாக அமித்ஷா கூறினார். அதனை சொட்டு நீர் பாசனம் என்று கூறாமல் எச் ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.