குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சமீபத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்தாகும்.

அதே நேரத்தில் ஊட்டி செல்வதற்காக அந்த பாதையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பயணிகளும் உயிர் தப்பினர். புத்தம் புதிய பேருந்து விபத்தில் சிக்கியதால் மனமுடைந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது நிலையைக் கண்டு கலங்கிய பயணிகள் அவரை சமாதானப்படுத்தினர்.

சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் புதிய பேருந்து விபத்தால் ஓட்டுநர் கண்ணீர் விட்டு அழுதார் பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்தனர்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...