அச்சம் வேண்டாம்; கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை - ஆய்வுக்குப்பின் அதிகாரிகள் உறுதி

கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு விற்பனையாகும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இன்று உக்கடம் மீன் மார்க்கெட் சில்லறை விற்பனை நிலையத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள 64 கடைகளில் 45 கடைகள் மீன்கள் விற்பனைக்கென்றே பிரத்தியேகமாக செயல்படுபவை.



அங்கு மீன்கள் சுகாதாரமாக விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் உபயோகிக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் அங்கு விற்பனையாகும் மீன்கள் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் கூறுகையில், "மீன் விற்பனையாளர்களுக்கு அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்படும் மானியங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின் ஆய்வு மேற்கொண்டதில் மீன்களில் எந்த விதமான ரசாயன பொருட்களும் கலக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மீன் விற்பனையாளர்களிடம் மீன் விற்பனை குறித்த யுத்திகளும் எடுத்துரைக்கப்பட்டது." என்றார்.



இது குறித்து, உக்கடம் மீன் மார்க்கெட் சங்க தலைவர் H.S. பாவா கூறுகையில், "இங்கு தரமான மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. கடற்கரையில் இருந்து மீன்கள் வரும் போதே வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. ஒருவேளை அவர்கள் ரசாயனம் கலந்த மீன்கள் கொடுத்தால் அது திருப்பி அனுப்பப்படும்." என்றார்.



இந்த ஆய்வின் போது மீன் மார்க்கெட் செயலாளர் காதர், மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...