நீலகிரியில் பரவலான மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



நீலகிரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் இதமான காலநிலையும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்யும் பருவ மழையின் தாக்கத்தினால் மாநில எல்லையோர பகுதியான நீலகிரி மாவட்டம் இந்த மழைப் பொழிவைப் பெறுகிறது. இந்த சூழலில் தேவாலா பகுதியில் நேற்று 42 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல, அவலாஞ்சியில் 44 மி.மீ., கூடலூரில் 27 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் 236 மி.மீ., மழை பதிவானது. 



இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழை, இன்று மாலை நேரம் முதல் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், குளிரின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், வெளியூர்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...