கோவையில் பள்ளி உடமைகளுக்கு தீ: தடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த மூன்று வாரங்களாக பள்ளி உடைமைகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக புகார் அளித்தும் சூலூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



இந்நிலையில், தீ வைப்பு சம்பவங்களை தடுக்கக் கோரி, அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், புத்தகங்கள், சீருடைகள்  உள்ளிட்டவை எரிந்து நசமானதாகவும், இந்த தீவைப்புகளினால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...