நீலகிரி: 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று உதகை மார்கெட் பேருந்து நிலைய பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏழாவது நாளான இன்று ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், குந்தா ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளருக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மார்க்கெட் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த் திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.