கனவு ஆசிரியர் விருது: புறக்கணிக்கப்படும் சிறப்பாசிரியர்கள்

கோவை: இந்தாண்டு முதல் புதியதாக அறிவித்துள்ள கனவு ஆசிரியர் விருதில் விதிமுறைகளை மீறி விருது வழங்கப்படவுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் இதில் புறக்கணிக்கப்படுவதாகவும் கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கோவை: இந்தாண்டு முதல் புதியதாக அறிவித்துள்ள கனவு ஆசிரியர் விருதில் விதிமுறைகளை மீறி விருது வழங்கப்படவுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் இதில் புறக்கணிக்கப்படுவதாகவும் கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆண்டுதோறும் நல் ஆசிரியர் விருது வழங்குவது போல், இந்தாண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள இளம் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.



ஆனால், இந்தாண்டு வழங்கப்படவுள்ள விருதில் அந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் கலை ஆசிரியர் நலச்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.



இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், "கனவு ஆசிரியர் விருதிற்கு சிறப்பாசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள இளம் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக இவ்விருது அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் விதிமுறைகளை மீறி தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கும், பணி அனுபவம் அதிகம் உள்ள ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

முன்னதாக விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அந்த விண்ணப்ப படிவம் கூட தரப்படவில்லை. அதன் பின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது இயக்குனர் அறிவிப்பின் படி விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்.

இதனிடையே, திடீரென எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் கோவையை தவிர்த்து எழு மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. கோவையைச் சேர்ந்தோருக்கு வரும் 12-ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக ஐந்து ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்கள் கொடுக்கப்படாத நிலையில் எவ்வாறு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? எந்த அறிவிப்பும் இல்லாமல் நேற்று தான் விருது வாங்குவோர் பட்டியல் வெளியிடபட்டன. எதன் அடிப்படையில் இது வழங்கப்படுகிறது? இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறி கொடுக்கப்படும் இந்த விருதுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...