கோவை: நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து மணல் திருடப்படுவதைப் போல் தற்போது அங்கிருக்கும் நாணற்புற்களும் கொள்ளை போவதாக புகார் எழுந்துள்ளது.

மாதவராயன்பாளையம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து லாரிகள் மூலமாக நாணற்புல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் இந்த ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்தது.
இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது சட்டவிரோதமாக நாணற்புல் வெட்டிக் கடத்தப்படுகிறது. இவ்வாறு நாணற்புல் வெட்டப்படும் போது, ஆற்றங்கரையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், அவற்றை வியாபார நோக்கில் வெட்டிக் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.