லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தத்தில் விளம்பர பலகை சரிந்து விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை நேற்று திடீரென சாய்ந்ததால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.


கோவை: லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை நேற்று திடீரென சாய்ந்ததால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



கோவையில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அவ்வப்போது சாய்ந்து விழுந்தன. 

இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் லட்சுமி மில்ஸ் பகுதியிலிருந்து புலியகுளம் செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகை ஒன்று திடீரென சாய்ந்தது. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் இருந்த தனியாருக்கு சிந்தமான விளம்பர பலகை விழும் நிலையில் இருந்தது. இதனால் அங்கு பேருந்துக்காக காத்திருப்பவர்கள் பீதியுடனேயே அந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சூழலில், தற்போது விளம்பர பலகை சரிந்துள்ளது. தற்போது வரை அது அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...