கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

 

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் இந்திய புற்றுநோயியல் கூட்டமைப்பும் இணைந்து, கோவையில் ‘பெஸ்ட் ஆப் அஸ்கோ-2018’ (BEST OF ASCO 2018) என்ற மாநாட்டையும் பெண்களை தாக்கும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியையும் நடத்தியது.

இந்த வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி என்.ஜி.பி கலை அறிவியல் கல்லுாரியில் தொடங்கி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வரை நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை தலைவர் டாக்டர்.நல்லா.ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார். 



இதில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மருத்துவர்கள், புற்றுநோயை வென்றவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக ‘பெஸ்ட் ஆப் அஸ்கோ-2018’ மாநாட்டினை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டினை அமெரிக்க புற்றுநோய் சொசைட்டி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. 

இதில், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய சிகிச்சை முறைகள், தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகள், வரும் முன் தடுப்பு முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றன. புற்றுநோயை வரும் முன் காக்கும் முறைகள், வந்த பின்னர் அதற்கான அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...