வால்பாறை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வால்பாறை: தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பிய நிலையிலேயே உள்ளது.
மழை அளவு
வால்பாறை 19 மி.மீட்டர், சின்னகல்லார் 48 மி.மீட்டர், நீராரர் அணை 37 மி.மீட்டர், சோலையார் அணை 31 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீராரர் அணை அணையின் நீர் வரத்து 139.35 கன அடியாக உள்ள நிலையில், கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 1184.03 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் உள்ளது. அங்கிருந்து 1184.03 கன அடி விடுவிக்கப்பட்டு பைபாஸ் வழியாகவும், சேடல் வழியாகவும் 656.02 கன அடி பரம்பிகுளம் அணைக்கும், 413.08 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.