குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமாரனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கௌதமன் என்பவர் மகன் திலிபன் (17). இவர், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார். அதேபகுதியில், வசிக்கும் லாரி ஓட்டுநர் நல்லதம்பி என்பவரது மகன் பரத் (12) அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். 

விடுமுறை தினமான இன்று திலிபன், பரத் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து மாணிக்காபுரம் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நால்வரும் நீரினுள் இழுக்கப்பட்டுள்ளனர். இதில், பயந்து போன சிறுவர்கள் அலறியுள்ளனர். அவர்ளது சத்தத்தைக் கேட்ட அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். ஆனால், அதற்குள் திலிபனும், பரத்தும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...