ஈஷா கிராம மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 



ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஆலாந்துறையில் ஈஷா கிராம மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, இலவச மருத்துவ முகாம்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ முகாமில், பெங்களூருவில் அமைந்துள்ள பிரபல நரம்பியல் மருத்துவமனையான NIMHANS நரம்பியல் வல்லுநர் டாக்டர். K.பாலாஜி கலந்துகொண்டார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல்மருத்துவம் ஆகியவற்றிற்கான சிகிச்சை வழங்கப்பட்டது. பல் சார்ந்த நோய்களுக்காக 43 பேரும், நரம்பு சார்ந்த நோய்களுக்காக 12 பேரும், பொது நோய்களுக்காக 145 பேரும் இந்த இலவச முகாமில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். மேலும், காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பொதுவான நோய்களுக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...