நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சாண்டிநல்லா பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில். இத்தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவு நீர் பைக்காரா அணையில் கலந்து வந்தது. இதனால். பைக்காரா குடிநீர் திட்டத்தின் கீழ், அந்த நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாமலும், மீறிப் பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை இந்தத் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் தொழிற்சாலை நிர்வாகம் எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 28-ம் தேதி தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், இத்தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி தொழிலாளர்களை வெளியேற்றி உள்ளதால் சுமார் 400 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதாகக் கோரி இன்று உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.