நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நடக்கவிருந்த பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி சினிமா உலகில் 80-களில் கொடிகட்டி பறந்த நடிகர்களின் மிதுன் சக்கரவர்த்தியும் ஒன்று. இவர், சினிமா துறை மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். உதகையில் இவருக்கு பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இது தவிர மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் பெரிய ரெசார்ட் ஒன்றும் சொந்தமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், இவரது மகன் மகாக்ஷேமிமோவிற்கு திருமணத்தை உதகையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார். உதகையில் உள்ள இவரது நட்சத்திர ஓட்டலில் இன்று திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இவரது உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இவரது மகன் திருமணம் உதகையில் நடப்பது உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் மீடியாக்களுக்கு கூடதெரியாது அளவிற்கு ரகசியமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகாக்ஷே தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகவும் ஏற்கனவே நடிகை ஒருவர் மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் உதகைக்கு விரைந்துள்ளனர். அவர்கள், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரது மகனிடம் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால், இன்று உதகையில் உள்ள அவரது நட்சரத்திர ஓட்டலில் மடால்ஷா என்பவருடன் நடக்கவிருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.
மேலும், இந்த பெண்ணின் குடும்பம் உதகையில் இருந்து கிளம்பி விட்டதாகவும் தெரிகிறது. எனினும், தொடர்ந்து ஓட்டலில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணத்தை முன்னிட்டு ஓட்டல் முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மிதுன்சக்கரவர்த்தியின் நெருங்கிய உறவினர்கள், நண்ணபர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமணம் தடைப்பட்டது தெரிந்து ஓட்டலுக்கு பத்திரிக்கையாளர்கள் சென்றனர். ஆனால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.