பேருந்து சேவை தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்த அமைச்சர் : பயணிகள் அதிருப்தி

கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர்.


கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர். 



கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று 25 புதிய பேருந்து தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைசார் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு விழா நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதிகாரிகள், மக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் 10 மணிக்கே குவியத் தொடங்கினர். அதன்பின், சட்டமன்ற உறுப்பினர்களும் வந்துவிட்ட நிலையில், அமைச்சர் மதியம் 12.45 மணிக்கு வந்தார். 



அமைச்சர் வருகையையொட்டி 3 மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் காத்திருந்தனர். பயணிகளும் புதிய பேருந்துகளில் பயணிக்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் பலமணி நேரம் ஆனதால் கடுப்பாகினர்.

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், "அமைச்சர் அவர்களுக்கு நிறையப் பணிகள் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நேரம் ஒன்று நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் தாமதமாக தான் வருகிறார்," என்றார்.

பயணி ஒருவர் கூறுகையில், "3 மணி நேரமாக புதிய பேருந்தில் பயணிக்கலாம் என காத்திருந்தேன். அமைச்சர் வருகையில் தாமதம்தான் இதற்கு காரணம் என்றார். உக்கடம் பேருந்து நிலையத்தின் உள்ளே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், சில நகர பேருந்துகள் பல மணி நேரம் பயணிகளை வெளியே நிறுத்தி தான் ஏற்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...