கோவையில் புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 25 புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 25 புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



கடந்த 3-ம் தேதியன்று தமிழகப் போக்குவரத்துத் துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 515 புதிய பேருந்துகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அவற்றில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குப் பேருந்துகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒதுக்கி வைக்கப்பட்டன. கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு முதல்கட்டமாக 25 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. 



இந்த நிலையில், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் புதிய பேருந்துகளின் சேவையை நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்டத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமனி தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் உடுமலை, பழனி, திண்டுக்கல், சிவகங்கை, நத்தம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக டவுன் பேருந்து இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- புதிதாகக் கேட்கின்ற திட்டங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சாலைகள் அனைத்தும் புனரமைக்கப்படுகின்றன. மேம்பாலம் உட்பட திட்டங்கள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகின்றன. மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் கூடிய விரைவில் தொடங்கப்படும். குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்படுகின்றன. பேருந்தில் குறைகூறும் அளவிற்கு எந்தக் குறைபாடும் இல்லை. டி.டி.வி., தினகரன் மட்டும் அல்ல, யார் வந்தாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் குறுக்கு வழியில் செல்ல முயற்சிக்கின்றனர். 

டி.டி.வி., தினகரன் எப்படிக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று அனைவருக்கும் தெரியும். அதை விமர்சிக்க விரும்பவில்லை. நடத்துநர் இல்லா பேருந்து வந்ததன் மூலம் ஆட்குறைப்பு என்பது நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும். நடத்துநர் இல்லாப் பேருந்து விவகாரம் போக்குவரத்து சட்டத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளதை, போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். சூயஸ் குடிநீர் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம், என்றார்.

இதுவரை சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு, இந்தத் திட்டத்தில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக உள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனிடையே, 'பாதுகாப்பு அம்சங்கள், இருக்கை வசதிகள் ஆகியவை இந்தப் புதிய பேருந்துகளில் சிறப்பாக உள்ளது' என பயணிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...