கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: கோவை குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை

கோவை: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

கோவை: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி முதல் 17 நாட்கள் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 21-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் மீண்டும் 24-ம் தேதி கோவை குற்றாலம் அடைக்கப்பட்டது. பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டதாகவும், மீண்டும் அடைக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களால் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில், ஒருவாரத்திற்குப் பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் கடந்த 05-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வனத்துறை அனுமதி அளித்தது.

இந்த நிலையில், நள்ளிரவு முதல் சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், கோவை குற்றாலத்தின் அருவியில் தடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை குற்றால அருவியில் குளிக்க வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை குற்றால அருவி திறக்கப்படுவதும், மூடப்படுவதுமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...