குளங்களே ஸ்மார்ட் சிட்டிக்கு அடித்தளம் : அப்படிப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டிய நமது பொறுப்புகள் என்ன...?

குளங்களை பாதுகாக்கத் தவறிவிட்டு, இயற்கையின் மீது பழிசுமத்தி குளங்களை பாதுகாக்காமல் தவறும் மனிதர்கள் புரிந்து கொண்டால், நமது நகரை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், இயற்கைப் பாதிப்புகளைத் தவிர்த்து வாழ முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

குளங்களை பாதுகாக்கத் தவறிவிட்டு, இயற்கையின் மீது பழிசுமத்தி குளங்களை பாதுகாக்காமல் தவறும் மனிதர்கள் புரிந்து கொண்டால், நமது நகரை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், இயற்கைப் பாதிப்புகளைத் தவிர்த்து வாழ முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

பெர்லின், ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் கோடை காலங்களில் குளங்களில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கோவை ஸ்மார்ட்சிட்டி குறித்த கலந்துரையாடலின் போது இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மார்டின் நே தெரிவித்துள்ளார். மேலும், ஜெர்மனியில் உள்ள நீர்நிலைகளின் நிலை குறித்து பேசிய அவர், 'ஒரு சாதாரண நரை, ஸ்மார்ட் நகரமாக முன்னேற்றுவதற்கு குளங்களே முக்கிய காரணி', என்றார். 

நமது கோவையில் உள்ள 26 குளங்களும், நகரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறதா..? என்ற கேள்வி பலமடங்கு மதிப்புள்ளது. ஆனால், இதற்கு எந்தவித ஆடம்பரமான பதிலும் கிடையாது. ஜெர்மனி தூதர் கூறியதை, கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள 8 நீர்த்தேக்கங்களில் செய்ய (நீச்சல் அடிப்பது) மறந்துவிட்டோம். இதுஒருபுறம் இருக்க, நீரை சேமித்து வைக்க சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களே தற்போது வரைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதியதாக எந்தவொரு நீர்தொட்டிகளும் நாம் புதிதாகக் கட்டி வைக்கவில்லை. காலப்போக்கில், பழங்காலத்து நீர்த்தேக்கங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாறிவிட்டது. குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் புதுப்பித்தல் மற்றும் பறவைகள், நீர்வாழ் உயிரினங்களின் உகந்த சூழலில் இருந்து வந்த நீர்த்தேக்கங்கள், தற்போது, சுற்றுச்சூழல் மாசுபாடு, மனிதனின் ஒழுங்கற்ற முறைகளால் துர்நாற்றம் மிக்கவையாக மாறிவிட்டது. 

இயற்கைக் குப்பைக் கிடங்கு : 

மாநகராட்சியின் அலட்சிய குப்பை மேலாண்மை திட்டத்தினால், நீர்த்தேக்கங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்தொட்டிகளுக்கு அருகே உள்ள பெரும்பாலான பகுதிகளில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால், நீண்ட தூரம் சென்று வீட்டுக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். 



உதாரணமாக, வாலாங்குளத்தைச் சுற்றி பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகிறது. இதே நிலைதான் பிற குளங்களில் நிலவுகிறது. வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் மற்றும் இறக்கும் நாய்கள் போன்றவை இந்தக் குளக்கரையில் கொட்டுகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அரசு வாகனங்களிலேயே வந்து குப்பைகளை கொட்டிச் செல்வது வேதனையை அளிக்கிறது. 

மீன்பிடித் தொழிலுக்கு சிரமம் : 







பெரும்பாலான குளங்களில் அதிக குத்தகைத் தொகை விதிக்கப்படுவதால், குறைவான மீனவர்களே மீன்பிடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒப்பந்தத்தின் மூலம் செப்டம்பர் முதல் மார்ச் வரை மீனவர்கள் மீன்பிடிப்பு காலம் நீண்டு இருப்பதால், குளத்திற்கு பறவைகள் வருவதும் தடைபடுகிறது. மீறி குளத்திற்கு வரும் பறவைகளையும் மீனவர்கள் தாக்குகின்றனர். மேலும், சிறிய வலைகளில் மீன்பிடிப்பதாகக் கூறிவிட்டு, உரிய அனுமதியின்றி பெரிய வலைகளில் மீன்பிடிக்கின்றனர். இதனை கோவை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையும் கண்டும்காணாமல் இருக்கின்றன. 




கழிவுநீர் கழிப்பிடம் :

மாநகரில் அமைந்துள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பது நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனையாகும். அண்மைக் காலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கோவை மாநகராட்சி நிர்வாகம், நீர்த்தேக்கங்களில் நீர் சுத்திகரிப்பு மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இதனால், நீர்நிலைகள் அனைத்திலும் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க முடியாமல் இருக்கிறது. 

வாகனங்களைக் கழுவுதல் : 







கோவையில் உள்ள நீர்நிலைகள் மாநகரின் புறப்பகுதிகளில் அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி கழுவிச் செல்கின்றனர். அண்மையில் புட்டுவிக்கி குளத்தில் 5 வேன்கள் நிறுத்தப்பட்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கழுவிக் கொண்டிருந்தது நமக்கு புகைப்படமாக கிடைத்த ஆதாரமாகும். இயற்கை நீர்நிலைகளில் இதுபோன்ற வாகனங்களைக் கழுவுவதால், மாசுபாடுமிக்க ஆயில் உள்ளிட்ட கழிவுகள் நீரில் கலக்கின்றன. இதனால், அந்த நீரில் வாழும் மீன்கள் மற்றும் பறவைகள் தங்களது உயிர்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. 

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு : 







மழைக் காலங்களில் நீர்நிலைகளுக்கு தங்கு தடையின்றி மழைநீர் பாய்ந்தோடும் வகையில், சோழர் காலத்திலேயே வாய்க்கால்கள் திறம்படக் கட்டப்பட்டன. அவை தற்போது, சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கால்வாய்க்கால்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுமானங்களால் நீர்த்தேக்கங்களுக்கு நீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. உதாரணமாக, ஆக்கிரமிப்புகளால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் மழைநீரானது, சின்னவேடம்பட்டி நீர்த்தேக்கத்தை சந்திப்பதே கிடையாது. 

வேட்டையாடும் நாய்கள் :







நீர்நிலைகளில் இருக்கும் பறவைகளுக்கு அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் அமரும் பறவைகள் வேட்டை நாய்களால் கொல்லப்படுகின்றன. இது தொடர்பாக சரியான விவரங்கள் ஏதும் கிடையாது. ஒரு காலத்தில் வனவிலங்காக இருந்த நாய்கள், தற்போது வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 

மக்களாகிய நாம் செய்ய வேண்டியவை...?







மேற்கண்ட தகவல்களால், இயற்கைக் காரணிகளை பாதுகாக்க மனிதர்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறரைக் குறை கூறுவது தேவையற்றது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 'புழா' என்ற குழுவினர் நீர்த்தேக்கங்களுக்கு புத்துயிர் கொடுத்து வருகின்றனர். அவர்கள் அண்மையில், டெல்லியைச் சேர்ந்த மீடியா நிறுவனம் விருது வழங்கிக் கவுரவித்தது. 

ஒரு சில குழுவினர் அல்லது அமைப்பினர் நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுப்பதை செய்து வருகின்றனர். இதன்மூலம், சிங்காநல்லூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது புதுப் பொலிவைப் பெற்றுள்ளன. இதேபோல, ஒவ்வொருவரும் இதுபோன்ற களப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...