அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் வாலிபர்

திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.


திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.



திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகர் (21). தனது பள்ளி பருவம் முதலே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த தனசேகர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து எப்பொழுதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வார்.

கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், பல்கலைக் கழகம் அளவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து மிஸ்டர். கோயம்புத்தூர் போட்டியில் பங்கேற்று ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்றார். 

மீண்டும் மிஸ்டர்.தமிழ்நாடு, மிஸ்டர்.இந்தியா போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற தனசேகர் தனது வெற்றி மைல்கல்லில் மேலும் ஒரு மகுடமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் 'மிஸ்டர் மசில்-2018' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 



ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் சென்ற ஒரே போட்டியாளர் தனசேகர். இவர் 22 வயதிற்குட்பட்ட பிசிக் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

உலக ஆணழகன் தனசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஏசியன் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வேன்." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...