தனியார் வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால், மனு கொடுக்க வருவோர் மற்றும் அலுவலர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திணறி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால், மனு கொடுக்க வருவோர் மற்றும் அலுவலர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திணறி வருகின்றனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பல நூறு மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மனு நீதி நாள் அன்று ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இவ்வாறு வரும் மக்களுக்கு முறையான பார்க்கிங் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை. 

இதன் காரணமாக தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் கிடைத்த இடங்களில் நிறுத்திவிட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங் இடங்களில் பெரும்பாலான வாகனங்கள் மாதக் கணக்கில் நிறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பி.டி.எஸ். என சொல்லக்கூடிய அத்துறை அதிகாரிகள் பெரும்பாலும் ரேசன் அரிசிகள் கடத்தி செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்து ஆட்சியர் அலுவலகம் பின்புறம் நிறுத்தி வைப்பது வழக்கம். ஆனால், இந்த வாகனங்கள் அவ்வாறு இல்லை மாதம் ஒருமுறை இடமாறி நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் இடமில்லாதவர்களும், ரயிலில் வெளியூர் செல்வோரும், அதிகாரிகளும் சிலரும் கூட தங்கள் வாகனங்களை மாதக் கணக்கில் நிறுத்தி செல்வதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதுபோன்ற வாகனங்களை அதிகாரிகள் கண்காணித்து வெளியேற்றினால் மாவட்ட ஆட்சியர் வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வசதியாக இருக்கும்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்த ஒழுங்குமுறை படுத்துவதற்கும், இரவு நேரங்களில் அலுவலகத்தைப் பாதுகாப்பதிற்கும் வாட்ச்மேன் கிடையாது. முன்னர் ஒரு வாட்ச்மேன் இருந்தார் அவர் இரவு நேரங்களில் கேட்டை பூட்டி விடுவார். இதனால், பலர் இதுபோன்று வாகனங்களை நிறுத்தாமல் இருந்தனர். கட்டண பார்க்கிங் அருகில் இருப்பதால், ஆட்சியர் அலுவலகத்தை இலவசப் பார்க்கிங்காக கருதி இங்கு நிறுத்துகிறார்கள். இதனை அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வேண்டும்," என்றார்.



மாதக் கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களை அதிகாரிகளால் எளிதில் வாகனத்தின் எண்ணை வைத்துக் கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே நிறுத்தினால் அதற்கு அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர் இதன் மீதும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தான் வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...