திண்டுக்கல் அருகே மயிலை வேட்டையாடிய இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இறைச்சிக்காக மயிலை வேட்டையாடிய பைனான்சியர் உள்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நடமாடும் விலங்குகள் மற்றும் பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குப் புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதையடுத்து, இந்த சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சின்னக்காமன்பட்டி அருகே வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், வேட்டையாடிய மயிலின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழனிச்சாமி (60), பாபு (55) என்பது அவர்களது பெயர்கள் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மயில் இறைச்சி, இறக்கைகள், துப்பாக்கிகள், விளக்குகள் போன்றவை பறிமுதல் செய்தனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...