சமூக செயற்பாட்டாளர் வளர்மதிக்கு ஜாமீன்: அடக்குமுறை பெரிய போராட்டத்திற்கு வழிவகுக்கும் என பேச்சு

சேலம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட சமூக செயற்பாட்டாளர் வளர்மதி 15 நாட்களுக்கு பின் அவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

சேலம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட சமூக செயற்பாட்டாளர் வளர்மதி 15 நாட்களுக்கு பின் அவர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் எடுத்துக்கொண்டிருக்கும்போது கடந்த 19-ம் தேதி ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது,  ஊழியர்களை மிரட்டியது போன்ற வழக்குகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, 15 நாள்கள் கழித்து நேற்று வளர்மதி ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், : "ஆளும் அ.தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக அனைவரையும் காவல்துறையைக் கொண்டு மிரட்டி அச்சுறுத்தி மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை வழங்காமல் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசியதில் என்ன குற்றம் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து பேசியதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. கைது செய்வதால் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இப்படி தொடர்ந்து அடக்குமுறையை ஏவினால் அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.'' என்றார்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...