பணத்திற்காக கோவையைச் சேர்ந்த பூவியாபாரியைக் கடத்திய கும்பல் கைது

கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் பணத்திற்காக பூ வியாபாரியைக் கடத்திய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆர்.எஸ்.புரம் லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்த பூ வியாபாரி விஷ்ணுராஜ்(38) என்பவரை கடந்த மாதம் 30-ம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரூ.1.62,000 பணத்தை பறித்துக் கொண்ட கும்பல், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக தாக்கிவிட்டு, இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணுராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் கே. பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளான சந்தோஷ் (22), தினகரன் (33), சதாம் உசேன் (23), நாகராஜ் (26), அரவிந்த் (23), ஹரிபிராத் (19) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து குற்ற வழக்கில் தொடர்புடைய சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தங்களது குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...