திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருப்பூர்: தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தொழில் துறை நலிவடைந்துவிட்டதாக பல்வேறு தொழில் துறையினரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, "நலிவடைந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் சிறு குறு அல்லது பெரிய நிறுவனங்கள் இணைந்து குழுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளை அணுகும் போது, மத்திய அரசு 70 சதவீதம், மாநில அரசு 10 சதவீதம் என மொத்தம் 80 சதவிகித மானியம் அளிக்கின்றன.
அதற்கான முயற்சியினை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் செய்து வருகிறது. மேலும், பருத்தி விலையேற்றம் என்பது பருத்தி கழகத்தின் தவறான ஏற்றுமதி கொள்கையால் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதியினை கட்டுப்படுத்த வேண்டும்." என்றார்.