கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் வரும் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஈஷா கிராம மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஆலாந்துறையில் ஈஷா கிராம மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, வரும் ஜூலை 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற நரம்பியல் நோய்களுக்கும், பல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக பல் எக்ஸ்-ரே எடுக்கப்படும் மற்றும் சலுகை விலையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்படும்.
மேலும், பொது மருத்துவப் பிரிவின் கீழ் வரும் அனைத்து உடல் நல கோளாறுகளுக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் பெறலாம். மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94425 90021, 0422-2651298 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.