திருப்பூர்: இந்தியாவிலேயே அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தருவதில் தன்னிகரற்ற மாவட்டமாக திகழ்வது திருப்பூர் மாவட்டம். இந்த பெருமையை பெற்ற திருப்பூரில் விவசாயம் என்பது கேள்வி குறியாக உள்ளது. காரணம் நீர் நிலைகளில் முறைகேடாக சாயக் கழிவு நீரினை கலந்து வரும் ஆலைகள் தான்.

திருப்பூரில் ஏராளமான சாய, சலவை ஆலைகள் இயங்கி வந்தாலும் அவற்றில் முறையான அனுமதி பெற்று இயங்கி வருவது மிகக் குறைந்தவையே. சிறிய அளவில் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள் முறைகேடாக சாய தண்ணீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றன. இவற்றிற்கு சற்றும் சளைக்காமல் அனுமதி பெற்ற சாய ஆலைகளும் தண்ணீரை நீர்நிலைகளில் திருட்டுத்தனமாக கலந்து விடுகின்றன.
அவ்வாறு வேட்டுவம்பாளையத்தில் சக்திவேல், திருநாவுக்கரசு என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு சலவை ஆலைகள் மணியன்காரம்பாளையம் பகுதியில் செயல்படும் சரவணன் என்பவருக்கு சொந்தமான கெம்டெக் நிறுவனத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறும் பொழுது, "கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018-ம் ஆண்டு மே மாதம் வரை அனுமதி பெற்று முறைகேடாக சாய தண்ணீரை வெளியேற்றிய 24 சாய ஆலைகள் மீதும், அனுமதி பெறாமல் சாய நீர் வெளியேற்றி வந்த 110 ஆலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருங்கால சந்ததியினரை வாழ வழியில்லாமல் செய்யும் இது போன்ற சாய ஆலைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.