நீலகிரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஒழிப்பு குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :- மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக பசுமைப்படை உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த மே 09-ம் தேதி தேதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
தடை செய்யப்பட்டவைகள்: அனைத்துத் தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள்கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சும் குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், ஸ்டைலோபோம் தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள் ஆகும்.
மேலும், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் சுற்றப்பயன்படும் பிளாஸ்டிக்குகள், லாமினேஷன் செய்யப்பட்ட காக்கித் தாள்கள், லாமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு 51 மைக்ரானுக்கு மேற்பட்ட கவர்கள் (மளிகை தேயிலை மற்றும் பேக்கரி பொருட்களை பேக்கிங் செய்ய மட்டும், முடிச்சு கவர்களாக பயன்படுத்தக்கூடாது.
உணவகங்களில் பயன்படுத்தும் சில்வர் பாயில் கண்டெயினர்கள் மற்றும் பேக்கரி பொருட்கள், சாக்லெட் பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் கண்டெயினர்கள், கட்டைக் கைப்பிடியுடன் கூடிய நெய்யப்படாத பைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பொருட்கள் கண்டறியும் வரை இந்த விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இத்தடையை செவ்வனே பயன்படுத்தி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைப் பெருமளவில் குறைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு கூறினார்.