தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2-ம் தேதி இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு, தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நவம்பர் 2-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இன்றும், நவம்பர் 3-ல் பயணம் செய்ய நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள முறையே, வரும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நவம்பர் 2-ம் தேதி செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவிற்காக தெற்கு ரயில்வே சார்பில் 250 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆன்லைன் மற்றும் நேரில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பாண்டியன், நெல்லை, மலைக்கோட்டை விரைவு ரயில்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.