திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற பெண் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாராணாபுரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர் கோபிநாத்திற்கு திருமணமாகி நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உடன் வேலை பார்த்து வந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்ட நிலையில், மகாலட்சுமி கோபிநாத் வீட்டின் அருகிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் கள்ளக்காதலுக்கு கோபிநாத்தின் நான்கு வயது மகன் இடையூறாக இருந்த காரணத்தால் கடந்த 2012ம் ஆண்டு சிறுவனை மகாலட்சுமி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், குற்றவாளி மகாலட்சுமிக்கு ஆயுள்தண்டனையும், 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.