விவசாயிகள் பாதிக்காத வகையில் 8 வழிச் சாலை திட்டத்திற்கு ஆவண செய்ய வேண்டும் : கோவையில் முரளிதரராவ் பேட்டி

கோவை: விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பா.ஜ.க., தேசிய பொதுச்செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பா.ஜ.க., தேசிய பொதுச்செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க.,விற்கு முக்கியமானது. அதுவும் தமிழகம் மிகவும் முக்கியமானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுக்க தேசிய தலைவர் அமித்ஷா வருகின்ற 9-ம் தேதி சென்னையில் பா.ஜ.க., தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது, 11 ஆயிரம் பா.ஜக., பிரதிநிதிகளையும் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க உள்ளார். தமிழுக்கு இந்த அரசு முன் உரிமை கொடுத்து வருகிறது. தமிழின் பெருமையை அடையாளப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 

ஜி.எஸ்.டி.,யில் மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநில அரசு ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கொண்டு வரும் பட்சத்தில், நிச்சயம் தீர்வு கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் செய்ய முடியும். தேர்தலில் கூட்டணி வைத்து கொள்வதற்கு பா.ஜ.க., திறந்த மனதுடன் இருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் நிலவுவதால், பா.ஜ.க., வளர்ச்சியடைய இது தான் சரியான தருண. தமிழகத்தில் பா.ஜ.க., தலைமையை மாற்றுவதற்கு எந்தவித தேவையும் இல்லை.

தொழில்துறையினர் பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளுக்கும் குறிப்பாக சிறு, குறு தொழில்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், 8 வழிச் சாலை அமைக்கப்பட வேண்டும். அதற்காக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும் போது போராட்டம் நடைபெறும். அதனால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் புரிய வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...