உதகையில் ஜே.சி.பி., இயந்திரத்தைத் திருடிய கொள்ளையன் புதுக்கோட்டையில் கைது

நீலகிரி : உதகையில் ரூ. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜே.சி.பி. இயந்திரத்தை திருடிச் சென்ற திருடனை புதுக்கோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


நீலகிரி : உதகையில் ரூ. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜே.சி.பி. இயந்திரத்தை திருடிச் சென்ற திருடனை புதுக்கோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

உதகை அருகே நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கட்டன். இவர் தனது மனைவி மங்களாவின் உதவியுடன் சுயஉதவிக்குழு மற்றும் வங்கியின் மூலமாக ரூ. 70 லட்சம் மதிப்புள்ள மாதத் தவணை முறையில் ஜே.சி.பி., இயந்திரத்தை வாங்கினார். மேலும், இந்த இயந்திரத்தை இயக்க மாத சம்பளத்திற்கு செல்வம் என்பவரை ஓட்டுநராகவும் பணிக்கு அமர்த்தினார். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் ஜே.சி.பி., ஆழ்துளை கிணறுகள், பறைகள் உடைக்க மாவட்டம் நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால், போதிய வருமானம் இல்லாத நிலையில், ஓட்டுநர் செல்வனுக்கு மாத மாத சம்பளம் கொடுத்து வந்தார்.

இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜே.சி.பி., இயந்திரத்துடன் ஓட்டுநர் செல்வம் மாயமானார். பின்னர், இது தொடர்பாக, தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள எஸ்.பி., சண்முகப்பிரியாவிடம் நேரடியாகப் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, ஜே.சி.பி.யுடன் மாயமான செல்வத்தை தேடி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, செல்வத்தின் செல்போன் சிக்னல் டவர் புதுக்கோட்டை ஆண்டிப்பட்டியைக் காட்டியதால், தனிப்படை போலீசார் ஆண்டிப்பட்டி கிராமத்திற்கு விரைந்தனர்.

அங்கு, ஜே.சி.பி., இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த செல்வத்தை கைது செய்து, ஜே.சி.பி., இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், காந்தல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட செல்வம், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...