சரக்கு போக்குவரத்தில் சாதனை படைத்த தெற்கு ரயில்வே

நடப்பு நிதியாண்டின் முதல் காலிறுதியின் முடிவில் சரக்குப் போக்குவரத்தில் தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலிறுதியின் முடிவில் சரக்குப் போக்குவரத்தில் தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2018-19 ஆண்டின் முதல் காலிறுதி (ஜுன் மாதம் வரை) வரையில் 09.32 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இதன் மூலம், ரயில்வே துறையின் 08.01 மில்லியன் டன் என்ற இலக்கு முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் சரக்கு ஏற்றுமதியான 48 சதவீதத்தை விரைவில் முறியடிக்கும் வகையில், இரும்பு, நிலக்கரி மற்றும் டாலோமைட் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

நடப்பாண்டில் தொடர்ச்சியாக நிலக்கரியின் ஏற்றுமதி 62 சதவீதமாக உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து டோலமைட் மற்றும் லிம்ஸ்டோனின் ஏற்றுமதியானது, கடந்த 2017-2018-ம் ஆண்டில் 0.184 மில்லியன் டன்னாக இருந்தது. இது நடப்பாண்டில், ஜுன் மாதம் வரையில் 0.428 மில்லியன் டன்னாக அதிகரித்து, 133 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 0.195 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 179 சதவீதம் அதிகமாகும். 2017-18-ல் 0.070 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...