பழனி கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீ: விசாரணையை சீர்குலைக்கும் சதியா?

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் விசாரணையை சீர்குலைக்கும் திட்டமா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் விசாரணையை சீர்குலைக்கும் திட்டமா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனதால் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு விசாரணையில் ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் பழனி முருகன் கோவில் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமை அலுவலகத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பல முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

ஏசியில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்கு காரணம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில் ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பான சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், தற்போது பழனி முருகன் கோவில் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...