சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர்: மலேசியால் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: மலேசியால் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 



திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 'வி கராத்தே அகாடமி' என்ற பெயரில் கராத்தே பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்காப்பு பயிற்சியான கராத்தே கலை பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் உலக அளவிலான கராத்தே போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பான், மலேசியா, தாய்லாந்து போன்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருப்பூர் சொகுத்தா நீகோன் சொடோரிய அசோசியேஷன் மூலம் பங்கேற்ற அனுஸ்கா என்ற வீராங்கனை குமிட்டே பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல, சஷ்டி மற்றும் முகம்மது மாமூன் ஆகிய வீரர்களும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். இந்நிலையில், பதக்கத்தை வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்குப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகமாக வரவேற்றனர். 

இதனிடையே, இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்று, தங்கப்பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவி அனுஸ்கா கூறினார்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...