திருப்பூர் தொழிலதிபருக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் : இருவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலதிபரிடம் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

மங்கலம் அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் லூர்து சேவியர் என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், லூர்து சேவியருக்கு இரு நாட்களுக்கு முன்பு மாலை 6 மணியளவில், அவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரூ. 30 லட்சம் பணம் உடனடியாக கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பனியன் நிறுவனத்தில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்தும் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லூர்து சேவியர், கொலை மிரட்டல் தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை மிரட்டல் விடுத்தது லூர்து சேவியரின் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பார்த்தசாரதி மற்றும் தற்போதைய ஊழியர் வசந்த் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...