கோவையில் குட்கா குடோனுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை உடைக்க முயன்றவர்கள் கைது

கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொன்னையராஜபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட குடோன் உரிமையாளர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ராஜவீதி, டவுன்ஹால், காந்திபார்க் போன்ற பகுதிகளில் உள்ள குடோன்களில் மற்றும் பெரிய கடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், பொன்னையராஜபுரம் பகுதியில் கடந்த 2-ம் தேதி குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குடோனை சோதனை செய்தனர். அப்போது இரண்டு டன் குட்கா பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குடோனை உடைத்து குட்கா பொருட்களை எடுத்து செல்ல முயன்றதாக குடோன் உரிமையாளர் அசோக் மற்றும் அவரது கூட்டாளிகள் காசிவிசுவநாதன், சலீம், அஸ்ரப், சுரேஷ் மற்றும் பாபு ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...