இடிந்து விழும் நிலையில் கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

நீலகிரி: கூடலூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுதடைந்து வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அதனை சரி செய்ய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: கூடலூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுதடைந்து வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அதனை சரி செய்ய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்-தொரப்பள்ளி சாலையில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் சார்பில், அரசு ஊழியர்களுக்கென சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு 144 மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவர்களின் தேவைக்காக அலுவலக கட்டிடமும் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது 50 குடியிருப்புகளில் மட்டுமே அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புகள் கட்டப்பட்ட காலத்தில் இருந்தே அதனை முறையாக பராமரிக்க தவறியதே, தற்போது அவை காற்று வாங்குவதற்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.



குற்றச்சாட்டு

இதுகுறித்து பல முறை மாவட்ட ஆட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தமிழக முதலமைச்சர் தனி பிரிவுக்கும் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி, சுகாதாரமின்மை, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்டவை ஏதுமின்றி தவித்து வருவதாகவும், காலியாக உள்ள வீடுகளின் கதவு, ஜன்னல்களை சிலர் திருடிச் செல்வதாகவும் குமுறுகின்றனர்.



ஏற்கனவே, இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடங்களில் கதவு, ஜன்னல்களும் பறிக்கப்பட்டதால் தற்போது பாழடைந்து காட்சியளிக்கிறது. குடியிருப்பு வாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்காக கட்டப்பட்ட அலுவலகத்திற்கும் இதே நிலை தான்.



இரவு நேரத்தில் மனித நடமாட்டம் வெகுவாக குறைந்துவிடும் காரணத்தால், அங்கு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவது மட்டுமின்றி, குடிமகன்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.



மழைக்காலம்

தென்மேற்கு பருவமழை கூடலூர் பகுதியில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்த குடியிருப்புகளின் சுவர்கள் மற்றும் மேற் கூரைகள் அனைத்தும் அவ்வப்போது இடிந்து விழுகிறது. இதனால், அச்சத்துடனேயே காலத்தை கழித்து வருகின்றனர் அரசு ஊழியர்கள்.



கூடலூர் பகுதியில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் சமவெளி பிரதேசங்களில் இருந்து வந்து பணிபுரியும் நிலையில், பராமரிப்பு இல்லாத இந்த குடியிருப்புகளில் வசிப்பதற்கு பயந்து வெளி பகுதிகளில் அதிக வாடகை கொடுத்து வசித்து வருவதாகவும், ஒரு சிலர் தங்களது கையில் உள்ள பணத்தை வைத்து குடியிருப்புகளை சீரமைத்து குடியிருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

காணாமல் போன நிதி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்புகளை பராமரிக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை என்றும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டும் இது நாள் வரை பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

வனவிலங்கு அச்சுறுத்தல், அடிப்படை வசதிகள் இல்லை, இடிந்து விழும் அபாயம் என்று பிரச்சனைகளின் மொத்த உருவமாக நிற்கிறது இந்த குடியிருப்பு வளாகம்.



ஏழை, எளிய மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வீடுகள் இல்லாமல் குடிசை வீடுகளிலும், தெருக்களிலும் வாழ்ந்து வரும் நிலையில், இது போன்று பராமரிப்பு இல்லாமல் உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்புகளை முறையாக பராமரித்து அரசு ஊழியர்களுக்கு தான் வழங்க வேண்டும் என்ற நிலை இல்லாமல், வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...