கோவையில் குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை, தொடர்ந்து 7 முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.


கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை, தொடர்ந்து 7 முறைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.



 

பச்சிளம் குழந்தைகளுக்கு செய்யப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை, மிகவும் சிக்கலானது. இந்த சிகிச்சையானது, குழந்தைகளின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய் இடம் மாறி இருந்தால் மேற்கொள்ளப்படுகிறது. இருதயத்தின் வலது அறையிலிருந்து வரும் ரத்தக் குழாய் மற்றும் நுரையீரலில் இருந்து வரும் இடது ரத்தக்குழாய் இடம் மாறி இருக்கும்.

சாதாரணமாக, குழந்தைகளுக்கு இருதயத்தின் இடது அறையிலிருந்து வரும் ரத்தக்குழாய், வலது நுரையீரல் உடன் இணைந்திருக்கும். இந்த மாறுபட்ட குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வது கடினம். பிறந்த சிசுவுக்கு இந்த ரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவனைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில், தென்னிந்திய அளவில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தான் முதல் முறையாக குழந்தைகளுக்கான இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. 

சமீபத்தில் இது போன்று 7 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில், பெரும்பாலான குழந்தைகள் பிறந்து 20 நாட்களுக்கு குறைவாகவும், 3 கிலோ எடைக்கும் குறைவாகவே இருந்தனர். கோவையில் முதல் முறையாக வெற்றிகரமாக பல குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...