கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதித்தை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்குதல், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திடுதல், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுதல் உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 228 கிராம பஞ்சாயத்துக்கள், 12 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனால் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.