கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 515 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், கோவை மண்டலத்திற்கு 250 புதிய மப்சல் (mufsal) பேருந்துகள் வரவுள்ளன. இது குறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த 250 பேருந்துகளில் 75 கோவை மாவட்டத்திற்கும், 25 நீலகிரி மாவட்டத்திற்கும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு 150 பேருந்துகளும் வருகின்றன வரவுள்ளன. இவை அனைத்தும் மப்சல் பேருந்துகள்.
வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளில் குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதியுடனான பேருந்துகள் அடுத்த கட்டமாக கோவை மண்டலத்திற்கு வரவுள்ளன." என்றார்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 515 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதில், சேலம் மாவட்டத்திற்கு 78, விழுப்புரம் மாவட்டத்திற்கு 60, மதுரை மாவட்டத்திற்கு 32, திருநெல்வேலி மாவட்டத்திற்கு 69, மற்றும் கும்பகோணத்திற்கு 64 புதிய பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 40 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.