திருப்பூரில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டம் - 150 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்கு 150 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் திட்டத்திற்கு 150 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமண்கரடு மற்றும் பூசாரிவலசு, வெள்ளக்கோவில் பகுதிகளில் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இரும்புத்தாது இருப்பது குறித்து மத்திய அரசு நிறுவனமான KIOCL நிறுவனம் ஆய்வு நடத்திவருகிறது. இதன் காரணமாக தங்களின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வாழ்வாதாரம் பறிபோகும் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரும்புத்தாது சுரங்க பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை முதல் வெள்ளகோவில் அருகே உள்ள வள்ளியரச்சல் பகுதி வரை அதிகப்படியான இரும்புத்தாது இருப்பதாக அரசு ஆவணங்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தகவல்களின் மூலம் உறுதிப்படுத்திய தேசிய கனிம வள ஆய்வு நிறுவனம் (NMET),இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க குதிரேமூக் நிறுவனத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 

ஆய்வில் இரும்புத்தாது இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மத்திய அரசின் இரும்புத்தாது அகழ்ந்தெடுக்கும்    சுரங்க நிறுவனமான KIOCL(KUDREMUKH IRON ORE LTD) க்கு இரும்புத்தாது இருப்பதை உறுதி செய்ய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மாதிரிகள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு மற்றும் தரைமேல் உள்ள மாதிரிகளை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த மாதம் முதல் கேஐஓசிஎல் நிறுவன அதிகாரிகள் ஓலப்பாளையம்,பூசாரி வலசு, திருமண்கரடு,வெள்ளகோவில்,காங்கேயம்  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், இப்பகுதியில் இரும்புத்தாதின் செறிவை கணக்கீடு செய்ய 3000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை சோதனை குழிகள் அமைக்க இருப்பதாகவும் KIOCL நிறுவன அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதுடன் 2 லட்சம் பேரின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என கருதுவதால் இப்பகுதியை சேர்ந்த 150 கிராம மக்கள் இரும்புத்தாது குறித்த ஆய்வுக்கும், சுரங்கப்பணிகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இரும்பு தாது சுரங்க பணிகளை கைவிடக்கோரி சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியை சேலத்தில் சந்தித்து மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...