திருப்பூர்: காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்கள் நலனில்தான் அக்கறை கொள்ளும் என திருப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் தெரிவித்தார்.
திருப்பூர்: காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்கள் நலனில்தான் அக்கறை கொள்ளும் என திருப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் உள்ள உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் தேர்தலை சந்திக்கும் எனவும் , ஜி.எஸ்.டியால் சாதனை ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை மாறாக வேதனைதான் என்றார்.
மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் எனவும் 8 வழிசாலை வேண்டாம் என்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல ஆனால் விவசாயிகளின் நலன் பாதிக்காதவாறு அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.