திருப்பூர்: திருப்பூரில் முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரைக் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து வேட்டைக்குப் பயன்படுத்த முயன்ற வலைகளை பறிமுதல் செய்தனர்.

பல்லடத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் முயல் வேட்டை நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், முயல் வேட்டையில் ஈடுபட முயன்ற 4 பேரும் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

கூலி வேலை செய்து வரும் ரவிக்குமார், ஈஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரேன் ஆகியோர் வேலை இல்லாத நேரங்களில் முயல்வேட்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கு அபராதத்தை விதித்த வனத்துறையினர், வேட்டைக்குப் பயன்படுத்திய வலைகள், கயிறு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.