கோவை : துடும்பு, பறை உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி, கோவையில் இசைக் கருவிகளை இசைத்து சமூக நீதிக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியின் சார்பில் துடும்பு, பறை, கொம்பு, மோளம் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது, துடும்பு, இசை உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்தும், நடனமாடியும் போராட்டம் நடத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக இசை கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை. கர்நாடகா இசை கலைஞர்கள் மற்றும் திரையுலகினர்களுக்கு வழங்கப்படுவது போல துடும்பு, பறை இசை கலைஞர்களுக்கும் விருது வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும், இசை கலைஞர்களுக்கு விருது வழங்க தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுமென்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.